Aayar Madal

அன்புக்குரிய இறை மக்கள் அனைவருக்கும் உலகை வென்ற உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த 2020 ஆம் ஆண்டின் தபசு காலத்தை உண்மையுடனும், பக்தியுடனும் கடைபிடிக்க போகிரோம். அதற்காக நம் உடல் ஆவி ஆத்துமாவை ஆயுதப்படுத்திக்கொள்வோம். பின்வர உள்ள தபசு கால வழிபாடுகள் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அனைத்தும் மாற்றுருவாக்கம் பெறுவதற்கான காலமாக பயன்படுத்திக்கொள்வோம்.

I. எவ்வழிகள் வழியாக மாற்றுவாக்கம் செய்ய அழைக்கப்படுகிறோம்

ஆடைகளை அல்ல உள்ளதை கிழிப்பதே – யோவேல் 2: 12-13 இந்த தபசு காலம் பழைய வாழ்வை விட்டு, புது வாழ்வுபெற நம்மை அழைக்கிறது. தொடர்ந்து சாத்தானோடு போராடுவதை விட்டு விட்டு இயேசு விடம் திரும்புவோம். வெளிப்புற தோற்ற்றத்தை பெற்றுக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் சடங்கின் படி, ஆடைகளை கிழிப்பதால் மட்டும் ஏற்படுவதல்ல நம் உள்ளதை கிழித்து நம் ஆண்டவரிடம் வரும்போது மட்டுமே மாற்றம் நம் வாழ்வில் நிகழும்.

II. பழைய படைப்பல்ல, புதிய படைப்பாகவே – 2 கொரி 5:17

இந்த தபசு காலத்தில் நம் எண்ணங்களை, சிந்தனைகளை, ஜெபம் என்னும் கருவியல் நாம் செதுக்கிக்கொள்வோம். சிற்பியானவன் ஒரு கல்லை செதுக்க , செதுக்க அவன் எண்ணத்தின் படி ஒரு புதிய படைப்பாக மாறும். அதை போலவே நம் என்னனத்தை செதுக்கவே தபசு காலம்.

III. உறவுகளை சிதைக்க அல்ல, உறவுகளை சரிசெய்யவே – 2 கொரி 5:20, 6:1

இந்த தபசு காலம் நாம் கடவுளோடும் , அனைத்துசக மனிதர்களோடு நல்ல உறவு கொள்ள வேண்டும். இன்று எல்லா இடத்திலும் பல பிரச்சனைகளை முன் வைத்து உறவில் பாசிபிடித்து , பழுதடைந்து, உடைந்து போன பாலங்களை போல சிதறுண்டு வாழ்ந்து வருகிறோம். இது ஒரு பெரிய குறைபாடாகவே நம் கிறிஸ்தவ வாழ்வில் இருந்து வருகிறது. இந்த குறைபாடுகளை களைந்து உறவுகளை சரி செய்யவும், ஒப்புரவாகவுமே இந்த தபசு காலம் அழைக்கிறது.
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாலாபுறமும் பிரிந்துள்ள இவ்வுலகை சிலுவை எனும் மரத்தின் வழியே இரத்தம் சிந்தி நம்மை இணைத்துள்ளார். நம் இயேசு உடைந்த உறவுகளை சரிசெய்யவே இந்த தபசு காலத்தை பொற்காலமாக மாற்றினார். உறவுகளை சரிசெய்பவர்களே சிலுவையின் உறவினர்।
சரி செய்யாதவர்கள் சிலுவையை 4 துண்டு துண்டாக பிரிப்பவர்போல் ஆவர். ஆகா உறவுகளை சிதைக்க அல்ல உறவுகளை சரி செய்பவர்களே சமத்துவத்தின் பிள்ளைகள். உறவுகளை சரிசெய்யவே இந்த தபசு காலம். மேற்குறிய வழிமுறைகளை கடைபிடிப்போரே மாற்றுருவாக்கத்தின் சிந்தனை மற்றும் செயல் சிற்பிகள் ஆவர்.

முக்கியமான குறிப்பு

கடவுளுக்கு சித்தமானால் வருகின்ற ஜூன் (அ ) ஜூலை மாதத்தில் மடிப்பாக்கம் தூய மாற்கு ஆலயத்தில் நம் அன்பு தந்தை சென்னை பேராயர் பேரருட்திருஅறிவர் ஜார்ஜ் ஸ்டிபன் அய்யா அவர்கள் வழியே நம் CSI சபையின் 16 வயதிற்கு மேற்பட்ட திருமுழுக்கு பெற்ற ஆன், பெண் பிள்ளைகளுக்கு திடப்படுத்தல் கொடுப்பது பற்றி ஆலோசித்து வருவதால் பெற்றோர்களாகிய தாங்கள் சபையின் பொறுப்பாளர்களிடம் திடப்படுத்தல் எடுக்க ஆயுத்தமுள்ள பிள்ளைகளின் பெயர்களை கொடுக்கலாம். திடப்படுத்துதலுக்கான ஆயுத்த வகுப்புகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் என்பதை தெரிவிக்கிறேன். தொடர்ந்து இதற்காக ஜெபிக்கவும்.

அல்லேலூயா ! உயிர்த்தார் நம் உலக ஆண்டவர்.

கிறிஸ்துவின் ஆசியோடு என்றும் தங்களை வாழ்த்தும் ஆயர் & ஆயர் குடும்பம்

இறைப்பணியில் ஆயர்
அருள்திரு. D. Y. தினகரன், மடிப்பாக்கம் யூனிட்.