ஆயர் மடல்
அன்புக்குரிய இறை மக்கள் அனைவருக்கும் உலகை வென்ற உயிர்த்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள். இந்த 2020 ஆம் ஆண்டின் தபசு காலத்தை உண்மையுடனும், பக்தியுடனும் கடைபிடிக்க போகிரோம். அதற்காக நம் உடல் ஆவி ஆத்துமாவை ஆயுதப்படுத்திக்கொள்வோம். பின்வர உள்ள தபசு கால வழிபாடுகள் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அனைத்தும் மாற்றுருவாக்கம் பெறுவதற்கான காலமாக பயன்படுத்திக்கொள்வோம்.
I. எவ்வழிகள் வழியாக மாற்றுவாக்கம் செய்ய அழைக்கப்படுகிறோம் ஆடைகளை அல்ல உள்ளதை கிழிப்பதே - யோவேல் 2: 12-13 இந்த தபசு காலம் பழைய வாழ்வை விட்டு, புது வாழ்வுபெற நம்மை அழைக்கிறது. தொடர்ந்து சாத்தானோடு போராடுவதை விட்டு விட்டு இயேசு விடம் திரும்புவோம். வெளிப்புற தோற்ற்றத்தை பெற்றுக்கொள்வோம். பழைய ஏற்பாட்டின் சடங்கின் படி, ஆடைகளை கிழிப்பதால் மட்டும் ஏற்படுவதல்ல நம் உள்ளதை கிழித்து நம் ஆண்டவரிடம் வரும்போது மட்டுமே மாற்றம் நம் வாழ்வில் நிகழும்.